பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம், பெற்றோர், குழந்தைகள்

குடும்பமும் சமுகமும்

  • குரும்ப அன்பு என்பது மிகவும் பரந்ததும், நீடித்து நிற்பதுமான , உணர்வாகும். அதனால், மக்கள் வாழ்க்கையின் மீது செல்வாக்குப் பெற்றிருக்கும் உணர்வில், அதுதான் மிகவும் இன்றியமையாத தும், இரக்கமுள்ளதுமாகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி
  • தனது குரும்பத்திற்காக மட்டுமே வாழ்வது என்பது, விலங்குத்

தன்மை கொண்ட தன்னலமாகும். ஒருவருக்காக மட்டுமே வாழ்வது / என்பது தவறானது. ஆனால் தன் ஒருவனுக்காக மட்டுமே வாழ்வ தென்பது இழிவானதாகும். நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி

  • தனது வீட்டை தனது நெஞ்சத்தினால் கட்டு பவன் மட்டுமே,

அதனை ஒர் எரிமலையின் உச்சியில் கட்டு வான்.

அலக்சாண்டர் எர்சன்

  • தனது வீட்டின் எல்லைகளுக்கு அப்பால் வெளியே உள்ள எதனைப் பற்றியும் அறியாத குரும்ப வாழ்க்கை என்பது, அது எவ்வளவு நன்கு அமைக்கப்பட்டிருந்த போதும், இழிநிலையானதேயாகும்.

soj60&S&FIT&ILIT 6TIT&F60s

  • வாழ்வின் மகிழ்ச்சி அனைத்தையும் ஒருவர் மீதே மையப்படுத்தி

கவனம் செலுத்துமாறு ஒருவர் மீது மட்டுமே காட்டப்பரும் அன்பு, / மற்ற அனைத்தையும், ஒரு சுமையாகவும், துன்பமாகவும் ஆக்கு வது. இத்தகைய அன்பு இருவருக்குமே தீங்கு பயக்கும் நஞ்சு நிறைக்கப்பட்டதாகும். பெலிக்ஸ் ஜெர்ஜின்ஸ்கி

167