பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியலும், தலைமைப் பண்பும்

அரசியல்

  • அரசியல் கோடிக்கணக்கான மக்களின் உண்மையான எதிர் காலத்தை உள்ளடக்கியது. வி.இ.இலெனின்
  • அரசியல் என்பது பொருளாதாரத்தைப் பற்றி மிகக் கவனமாகக் கருத்தளிப்பதாகும். வி.இ.இலெனின்
  • அரசியல் என்பது வானத்திலிருந்து விழுவதோ இலவசமாக வருவதோ அன்று; அது ஒர் அறிவியலும், ஒரு நுண் கலையு மாகும். வி.இ.இலெனின்
  • ஒழுங்குமுறைகளைக் கொண்ட ஒரு கொள்கையே மிகவும் நடை முறைக்கேற்ற கொள்கையாகும். அத்தகைய ஒரு கொள்கை யினால் மட்டுமே பொதுமக்களின் நீடித்தப் பரிவுடனும் நம்பிக்கை யுடனும் வெற்றி பெற இயலும். வி.இ.இலெனின்
  • போராட்டவாதிகளும், பொதுமையாளர்களும் போராட்டத்தில் உள்ள இருக்கணிகளையும் இடையூறுகளையும் மறுக்கக் கூடாது. வி.இ.இலெனின்
  • ஒரு புதிய அரசியல் கருத்தினை (அரசியலை மட்டுமில்லை) மதிப்பிழக்கச் செய்யவும், பலவீனப்படுத்தவும் உறுதியான வழி எண்பது, அதனைப் பாதுகாப்பது என்ற போக்கில் அதனை

முட்டாள்தனமான நிலைக்குக் கீழிறக்குவதேயாகும்.

வி.இ.இலெனின்

  • அனைத்து மிகைப்படுத்தப்பட்ட நிலைகளும் கேடு விளைவிப் பவையே. நல்லவையும், பயன் நிறைந்த அனைத்தும் மிகைப் பருத்தப்பட்ட எல்லைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், ஒரு குறிப்பிட்ட

15