பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

தருவதாகும். ஒரு கெட்ட வளர்ப்பு என்பது, நமது எதிர்காலத் துன்பம், நமது கண்ணிர், மற்ற மக்கள் முன் நாட்டின் முன் நமது தவறுகள் ஆகியவற்றைத் தரும். ஆண்டன் மெகரன்கோ

  • ஒரு நிறைவான, உண்மையான, மனிதநேயம் கொண்ட சமுக வாழ்க்கையை வாழும் ஒரு தாயினால் மட்டுமே, குழந்தைகளுக்குக் கற்பித்துத் தன்னையே ஒர் எடுத்துக்காட்டாகப் படைத்துக் கொண்டு, அண்பினையும், பாராட்டு தலையும் கோரிப் பெற்று, தன்னைப் போலிருக்க ஒரு விருப்பத்தை ஏற்படுத்தும் ஒர் உண்மையான தாயாக இருக்க இயலும். தன் குழந்தைகளுக்காக வேலை செய்வது என்ற நிலைக்குத் தனது கடமைகளைக் கட்டுப்பருத்திக் கொண்ட ஒரு தாய், அவர்களை வளர்க்கும் ஒரு தாயில்லை; ஆனால் அவளின் குழந்தைகளின் அடிமையே ஆவாள். ஆண்டன் மெகரன்கோ
  • உனது பெற்றோரின் அன்பு அனைத்தையும் ஒரு குழந்தையின் மீதே செலுத்துவதன் மூலம், அஞ்சத்தக்க தவற்றை நீ செய்து கொண்டிருக்கிறாய். ஆண்டன் மெகரன்கோ
  • ஒரு முதியவருக்கு வேலை என்பது எப்படியோ, அப்படியே ஒரு குழந்தைக்கு விளையாட்டு எண்பது இன்றியமையாதது ஆகும். குழந்தை அதன் விளையாட்டில் எப்படி இருக்கிறதோ, அப்படியே முதியவர் தனது வேலையில் இருக்கிறார். அதனால்தான், ஒரு தனிப்பட்ட எதிர்கால மனிதனை வளர்ப்பது சிறப்பாக விளை யாட்டில் நிகழ்கிறது. ஆண்டன் மெகரன்கோ
  • குழந்தைகளை வளர்ப்பது என்ற கலை ஏறக்குறைய ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரிந்தும், அறிமுகமானதுமாகத் தோன்றுவது என்னும் சிறப்பான வேறுபாட்டைப் பெற்றுள்ளது.சிலருக்கு அது மிக எளிதானதாகவும் தோன்றுகிறது. உண்மையில், அதனைப் பற்றிக் கோட்பாட்டிலும், நடைமுறையிலும் அதிக அறிமுகமற்ற வர்களே அதனைப் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், அறிமுக மானவர்களாகவும் உள்ளனர். காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

177