பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • திருமணம் செய்து கொள்வதென்பது ஆர்வமளிப்பதானாலும், அது அன்பு கொண்டவர்க்கு மட்டுமே ஆனதாகும். பார்க்க கவர்ச் சியாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதற்காக மட்டுமே அவளை மணம் செய்து கொள்வதென்பது, கவர்ச்சியாக இருக்கிறதென் பதற்காக பயனற்ற ஒர் அணிகலனை வாங்குவது போன்ற தாகும். ஆண்டன் செகாவ்
  • நீ அன்பு செலுத்தாத ஒருவரை மணந்து கொள்வது என்பது ஒழுக்கக் கேடானதாகும். திமிட்ரி பிசரேவ்
  • குரும்ப வாழ்வெண்பது முடிவற்ற தொடர்ந்த கொண்டாட்டமாகவே எப்போதும் இருப்பதில்லை. மகிழ்வினை மட்டுமின்றி துன்பத்தை யும், வருத்தத்தையும், இழப்புக் கேட்டையும் பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொள். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • நீ தன்னலம் படைத்தவனெனின், ஒரு குரும்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பதே மேலானது. மகிழ்வான அண்பெனும் உணர்வு கொருப்பதிலேயே இருப்பதாகும். தன்னை மட்டுமே விரும்பும் ஒருவனால் எதனையும் கொருக்க இயலாது, அவன் மற்றவரிடமிருந்து எதனையும் எடுத்துக் கொள்பவன் மட்டுமே யெண்பதால், அதன் மூலம் அவன் அன்பின் சிறப்பான பகுதியைத் தவிர்க்க இயலாதபடி நஞ்சாக்கிவிடுகிறான். ஒர் உடல் ஊனத்தைப்

போலவே, தன்னலமும் ஒர் இடையூறேயாகும்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • உனது நெஞ்சிற்கினிய இல்லாள் உண்னுடனுள்ளவரை குடிசை யும் கூட விண்ணுலகமேயென்னும் சொற்றொடரில் மயக்கம் கொள்ளாதே, ஆறுதலடையாதே. திருமணமெண்பது உணர்வு நிறைந்த ஒன்று மட்டுமல்ல; ஆனால் அது ஒரு பருப்பொருள் ஒப்பந்தமுமாகும். ஒரு குரும்பத்தைப் பற்றித் திட்டமிரு முண், பொருளாதார நிலையில் நீ தன்னிறைவு பெற்றவனாகவும், உனது மனைவிக்கு உணவளிக்க, உடையளிக்க, வீடளிக்க

180