பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் e த. கோவேந்தனர்

மிகுந்த பாராட்டுதல்களும் பொய்யானவையாகவும், அற்பமான வையாகவும் உள்ளவை ஆகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • உனது பெற்றோர்கள் மகிழ்வுடனிருக்க வேண்டுமெனின், நீ நேர்மையுடன் வாழ்ந்து, பள்ளியிலும் உனது பணியிலும் மனத்தைச் செலுத்தி முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும்.

உனது வீட்டுக்கு மகிழ்ச்சியினைக் கொண்டு வா.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • மனிதன் பெற்றுள்ள முன்று பெருந்துன்பங்கள் - இறப்பு, முதுமை, கெட்ட பிள்ளைகள். முதுமைக்கும் இறப்புக்குமாகத் தனது வீட்டுக் கதவுகளை எவரும்முடிவைத்திருக்க இயலாது; ஆனால் அவனது வீட்டை, அவனது கெட்ட பிள்ளைகளிடமிருந்து, பிள்ளைகளா லேயே காக்கப்பட இயலும். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • தாயும் தந்தையும் உனக்கு வாழ்வளித்தவர்கள்; உனது மகிழ்ச்சிக் காகவே வாழ்பவர்கள். எனவே அவர்கள் உடல் நலத்துடனும் மன அமைதியுடனும் இருக்குமாறு பார்த்துக்கொள். அவர்களுக்கு

எந்த விதத் துன்பத்தையும் அளிக்காமல் நீ கவனமாக இரு.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • உனது தாயுடனும் தந்தையுடனும் உண்மை நிறைந்தவனாக இரு. அவர்கள் ஒப்புதலின்றி நீ செய்யக் கூடாத செயல்களில், அவர் களது விருப்பத்தையும் ஒப்புதலையும் கேள். மகன், மகளின் உண்மையான உரிமை என்பது, கீழ்ப்படிந்திருப்பதிலேயே உள்ளது. வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • நீ ஒரு குழந்தையாக இருந்தபோது, உனது தாயின் கண்களை உற்று நோக்கி, அவள் கவலையுடன் உள்ளாளா, அமைதியாக உள்ளாளா, தெளிவாக உள்ளாளா, குழப்பமடைந்து உள்ளாளா என்று அறிந்து கொள்ள நீகற்றிருக்கவில்லையெனில், எஞ்சிய உனது வாழ்நாள் முழுவதும் ஒழுக்கத்தைப் பற்றி ஏதும் அறியா தவனாகவே நீ இருப்பாய், இவ்வாறு ஒழுக்கம் பற்றிய

184