பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறுகள், வலிமைக் குறைகள், தோல்விகள் r 67 a

  • அனைத்து வகையான மக்களும் உள்ளனர்; அனைத்து வகையான உணர்வுகளும் உள்ளன. ஆனால் சிலரில், எருத்துக்காட்டாக, அனைத்து உணர்வுகளும், அவர்களது அனைத்து இயல்பான தீச் சுடரும், கரும் கோபத்தைக் கொண்டதாக இருக்கும். எவரோ ஒருவர் மீதோ ஏதோ ஒன்றின் மீதோ, தங்களின் பற்களை அவர்கள் பதிக்கும்போது மட்டுமே, அவர்கள் அறிவு நிறைந்தவர்களாக வும், திறமை படைத்தவர்களாகவும், சில நேரங்களில் நலம் படைத்த வர்களாகவும் இருப்பர். விசாரியோன் பெலின்ஸ்கி
  • மிகப் பெரிய, தூய மக்களின் மீது அவர்களது கருத்துகளுக்

காகவும் எண்ணங்களுக்காகவும் சேற்றை வாரி இறைக்கும் தங்களது

இழி தண்மையால் பழி வாங்குவதைவிட வஞ்சகர்களுக்கு அதிக மான மகிழ்ச்சியளிப்பது வேறெதுமில்லை.

- விசாரியோன் பெலின்ஸ்கி

  • கெட்டவர்களுக்குக் கெட்ட செய்தியைக் கேட்டறிவதே அனைத்து

மகிழ்ச்சிகளிலும் மிகச் சிறந்ததாகும். சோட்-ஆருஸ்த்-ஆவேலி

  • நியாய உணர்வற்றவர் எவ்வாறு கயவராக இருப்பாரோ, அதே போன்று கயவரும் நியாய உணர்வற்றவராக இருப்பவர் ஆவார். இவை இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தே செல்வன வாகும்; அதில் ஒன்று இல்லாதபோது, அடுத்ததை அது செய லிழக்கச் செய்கிறது. என்.வி.செல்குனேவ்
  • இரக்கமற்ற மனம் கொண்ட மக்கள், மற்றவரின் இழப்புக் கேட்டில் மகிழ்ச்சி பெறுபவர்கள் ஆவர். வாழா பாசவேலா
  • போக்கிலிகள் எப்போதுமே முரட்டுக் குணம் கொண்டவர்கள்; ஆனால் கதைத் தலைவர்களோ எப்போது பெருந்தன்மை படைத்த வர்களாக உள்ளனர். ஐ.ஐ. திமிட்ரியேவ்

213