பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்






தன்னலம் என்பது கொடிய மனப்பாண்மை என்பதின் தந்தையாகும். மாக்சிம் கோர்கி

தன்னலம் எண்பது பொதுவானவை அனைத்தையும் வெறுப்ப துடன், மனித நேயத்தைக் காண மறுத்து முதுகைத் திருப்பிக் கொண்டு, தன்னை ஒரு தனிப்பட்ட நிலையில் வைத்திருப்பதாகும்; அது, அதனைக் கொண்டிருக்கும் மனிதனுக்கு மட்டுமே இல்லா

மல், மற்ற அனைத்துக்கும் எதிரானவை.

அலெக்சாண்டர் எர்சன்

தன்னுணர்வு முனைப்பு மிக்கவர்களில் முன்று வகையினர்

உண்டு . தானும் வாழ்ந்து, மற்றவரையும் வாழவிடுபவர். தான்

மட்டுமே வாழ்ந்து, பிறரை வாழ விடாதவர், தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இருப்பவர். இவான் துர்கனேவ்

தன்னலம் படைத்த மக்கள் ஆழ்ந்த விருப்பு வெறுப்புகளைக் கொண்டு, கடமை ஆற்றுவதிலிருந்து விலகிச்செல்பவர்கள் ஆவர், சில கடமைகளுடன் தங்களைப் பிணைத்துக் கொள்வதில் ஒரு நிலையான, கோழைத்தனமான தயக்கத்தையே தங்களுள் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

பியோதர் தோஸ்ட்ரோயெவ்ஸ்கி

நீநேசிப்பது அனைத்தும் உண்னைப் பற்றியதாகவே இருந்தால், பின்னர் உனது வாழ்வில் ஏற்படும் கசப்பான ஆய்வுகள், உனது விதியைப் பற்றி நொந்து போகவும், கொடிய துன்பத்தை நுகர வும் உண்னைச் செய்துவிடுகிறது. பெலிக்ஸ் ஜெர்ஜேன்ஸ்கி

எங்கு அன்பு உள்ளதோ, அங்கு எந்தத் துண்பத்தினாலுமே ஒரு

மனிதனை அழித்துவிட இயலாது. தன்னலம் எண்பது மட்டுமே

உண்மையில் ஒரு மாபெரும் இழப்புக் கேடாகும். .

பெலிக்ஸ் ஜெர்ஜேன்ஸ்கி