பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நீ உண்மையாகவும் நேர்மை யாகவும் இருக்கிறாய் என்பதை மக்கள் உணரவேண்டும். மக்களி டமிருந்து உனது நேர்மையின்மையை மறைப்பதில் எப்போ துமே நீ வெற்றி பெற முடியாது. உன்னால் இயன்றவரை

அதற்காக வெட்கப்பட்டு அதிலிருந்து விலகியே இரு.

மைக்கேல் காலின்ரின்

4/கழ் - உண்மையும், போலியும்

  • அனைத்துப் பெரிய மனிதர்களும் மதிப்புயர்வையும், புகழ்ச்சியை யும் விரும்புபவர்களே. இது இன்றி, எந்தப் பெரிய துணிவான செயலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க மாட்டாது; பெரிய

செயல்கள் செய்து முடிக்கப்படாமலேயே இருந்திருக்கும்.

மைக்கேல் லோமனோசோவ்

  • உண்மையான புகழ் என்பது காண இயலாதது; பொது நலத் திற்காகத் தன்னையே அளித்துக் கொள்வதிலிருந்து பொங்கி வழிவது அது. ஏ.வி. சுவரோவ்
  • அனைத்து வகையான பெருமைகளிலும் மிகுந்த புகழ் பெற்றதும், விலைகொடுத்து வாங்க முடியாததுமான பெருமை மக்களால் அளிக்கப்படுவதேயாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • காலம் என்பதுவே மாபெரும், மதி நிறைந்த, தவறில்லாத திறனி யாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • இக்காலத் தேவைகள் பற்றி வரலாற்று மாமனிதர்கள் பங்களிக் காததைக் கொண்டு வரலாற்றுத் தொண்டு மதிப்பிடப்பருவ தில்லை. ஆனால் அவர்களது முன்னோர்களுடன் ஒப்பிடப்படும் போது அவர்கள் அளித்த அந்தந்த புதிய பங்களிப்புகளைக் கொண்டே அது மதிப்பிடப்படுகிறது. வி.இ.இலெனின்
  • பேரறிவு என்பதும் கயமை என்பதும் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை. அலெக்சாண்டர் பூஉடிகின்

28