பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் : த. கோவேந்தனர்

  • நமது புரட்சி, மற்ற அனைத்து இதர புரட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதற்கான காரணத்தை முடிவில் ஆராய்ந்து பார்த்தால், சோவியத்து அரசு போன்ற அமைப்பின் மூலம்நாட்டு முன்னேற்றத் தில் அதற்குமுன் ஆர்வமற்று இருந்த கோடிக்கணக்கான மக்களை அது தட்டியெழுப்பியதுடன், நாட்டுக் கட்டமைப்புப் பணியின் ஒர் ஆக்கமான பங்கினை ஏற்றுக்கொள்ளவும் செய்தது எண்பது வுமேயாகும். வி.இ.இலெனின்
  • சமன்மைப் புரட்சியெண்பது, நாட்டுச் செயலாட்சியில் கோடிக்கணக் கான மக்கள் நேரடியாகவும் ஆக்கநிலையாகவும் பங்கேற்றுக்

கொள்வதன் மூலம் மட்டுமே செய்யப்பட இயல்வதாகும்.

வி.இ.இலெனின்

  • உழைப்பாளிகள், உழவர்களின் சோவியத்துகள் எண்பது ஒரு புது வகையான அரசு, ஒரு புதிய, உயர்ந்த வகையான குடியாட்சி, ஒரு வகையான உழைப்பாளிகளின் வல்லாண்மை உடமையாளர் களின்றி, உடமையர்களுக்கு எதிராக அரசைச் செயல்படுத்தும் ஒரு வழி. வி.இ.இலெனின்
  • சோவியத்து ஆற்றல் எண்பது ஒரு புதிய குடியரசு நிலைக்கு உயர்ந்த துடன், அரசு செயலாட்சியில் கோடிக்கணக்கான உழைக்கும்

மக்கள் உரிமையுடன் பங்கேற்றுக் கொள்ளவும் செய்தது.

வி.இ.இலெனின்

  • சோவியத்து ஆட்சியின் அதிகாரம் உண்மையில் பெரும்பாண்மை யான மக்களால் செலுத்தப்பட்டதைப் போன்று, பெரும்பாண்மை யான மக்களால் அரசியல் அதிகாரம் செலுத்தப்பட்டதை இவ் வுலகம் இதற்கு முன் எப்போதுமே கண்டதில்லை.
  • சோவியத்து அல்லது உழைக்கும் வகுப்பின் குடியாட்சி உலகில் முதல்முறையாகப் பொதுமக்களுக்கான, உழைக்கும் மக்களுக் கான குடியாட்சியை உருவாக்கியது. வி.இ.இலெனின்

31