பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் e த. கோவேந்தண்

  • ஒன்றை அறிந்திருக்காதது என்பது இழிவானதோ, தீங்கானதோ அன்று. எந்த மனிதனாலும் அனைத்தையும் அறிந்து இருக்க இயலாது. தான் அறிந்திராததை அறிந்திருப்பது போல் போலி யாகக் காட்டிக்கொள்வதுதான் இழிவானதும், தீங்கானதுமாகும். இலியோ தோல்கதாய்
  • துண்டு துண்டான, ஒன்றுக்கொன்று இணைப்பற்ற அறிவினை நிரம்பப் பெற்றுள்ள தலை, ஒரு காப்பாளி தனக்கு வேண்டுவதை எப்போதுமே காண இயலாதவண்ணம் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள ஒரு கிடங்கினைப் போன்றதாகும். அறிவின்றி அனைத்து நடைமுறைகளையும் பெற்றுள்ள தலையானது, அனைத்துப் பெட்டிகள் மீதும் சீட்டு ஒட்டப்பட்டிருந்தும், அனைத்துப் பெட்டிகளும் வெறுமையாகவுள்ள ஒரு கடையைப் போன்றதாகும். காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • பயிலும் பாடத்தில் கவனத்தைக் குவிக்கும் மேலான ஆற்றலே பேரறிவாகும். இவான் பவ்லோவ்
  • அனைத்தைப் பற்றிச் சிறிதேனும், அதே போல் ஒரு சிலவற்றைப்

பற்றி அனைத்தையும் அறிந்திருப்பது நன்றே.

கே.ஏ. திமிரியாசேவ் * கடினமான பாடங்கள் என்று எதுவுமே இல்லை, ஆனால் எண்ணற்றவைப் பற்றி நாம் ஏதும் அறியாமலும், அதனைவிட அதிகமானவற்றைப் பற்றி மோசமாகவும், தெளிவற்றும் பகுதி பகுதியாகவும், தவறாகவும் கூட நாம் அறிந்திருக்கிறோம். இந்தத் தவறான அறிவு, நாம் பெற்றிராதவற்றைவிட அதிகமாக நம்மைக் குழப்பித் தடுத்துப் பின்னோக்கிச் செலுத்துகிறது.

  1. அலெக்சாண்டர் எர்சன்
  • எண்னைப் பொறுத்தவரை, எது ஒன்றினைப் பற்றி அறியாம லிருப்பதுவோ, எதுவும் சொல்ல இயலாமல் இருப்பதுவோ அறி யாமையில்லை; தான் அறியாதவற்றைப் பற்றிப் பேசுபவனே அறியாமை மிகுந்தவனாவான். எம்.எம்.பிரிஉடிவின்

40