பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • மிகச் சிலரால், அதிலும் மிகச்சிறந்த மனிதர்களால் மட்டுமே எனக்கு அது தெரியாது’ என்பதை எளிமையாகவும் வெளிப்படையாக வும் சொல்ல இயலும். திமிட்ரி பிசரேவ்

அறியாமை

  • மனித இனத்தில் அறியாமை என்ற ஒரே ஒரு கொடியதுதான் உள்ளது. அதே போன்று, கற்றறிதல் என்ற ஒரே ஒரு தீர்வுதான் அதற்கெதிராக உள்ளது. திமிட்ரி பிசரேவ்
  • இந் நாள்களில், அறியாமையும் மன உணர்வுகளும் அற்று

இருப்பன ஒர் ஒழுக்கக் கேடாகவே ஆகிவிட்டது.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • எங்குச் சரியான உண்மை என்பது இல்லாமல் உள்ளதோ, அங்கு ஊகங்கள் இடம் பெறுகின்றன. ஆனால் பத்து ஊகங்களில் ஒன்பது தவறானவையாக இருக்கின்றன. மாக்சிம் கோர்கி
  • மனிதனின் அற உணர்வுகளின் மீதான தளைகளைத் தகர்த் தெறிகிறார்களோ, அவர்களே உண்மையான மக்களாவர்.

மாக்சிம் கோர்கி

  • தவறான எண்ணங்கள் என்பவை, காலம் கடந்து போன உண்மை களின் இடியாடுகளாகும். மாக்சிம் கோர்கி
  • அறியாமை என்பது மனிதனை உலகைப் பற்றி அக்கறையற்ற வனாக ஆக்குகிறது. இந்த அக்கறையின்மை,மெதுவாக ஆனால் உடனடியாகத் தீங்கு விளைவிக்கும் ஒரு புற்றுநோய் போல் வளர் கிறது. கான்ஸ்டான்டின் பவ்ஸ்தோவ்ஸ்கி

41