பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னோட்டம்

சங்கச் சான்றோர்களுக்குப் பிறகு வாழ்வியக்கத்தை மேலும் மேலும் உயர்த்தும் புத்தெண்ணங்கள் மலரும் மாந்தர் மனங்கள் தமிழகத்தில் வள்ளுவரைத் தவிர வேறு எவரிடத்தும் தோன்றவே இல்லை.

வந்தேறிகளின் தப்பான - இழிவான - மடமையான மாந் தன்மைக்கு முட்டுக்கட்டையான விலங்காண்டித்தனமான வைதீக மூட நம்பிக்கைகளின் சமய எண்ணங்களே மண்டின. புத்தரின் புது மலர்ச்சி எண்ணங்களைப் புறக்கணிக்கும் அளவுக்குப் பொய்யும் புரட்டும் கையோங்கி நின்றன. மன்னர்களை மாய்த்து மக்களையும் மறுமலர்ச்சிக்கோ, புதுமலர்ச்சிக்கோ ஊக்குவிக்கும் பண்படுத்தும் உந்தாற்றலான உயர் எண்ணங்கள் சிறிதும் மலரவேயில்லை.

சமயக் குட்டையில் திருமூலர், அப்பர், மணிவாசகர், சில சித்தர்கள், தாயுமானவர், வள்ளலார் போன்றோர் சேற்றில் முளைத்த செந்தாமரையாகவும், அங்கும் இங்கும் குட்டையில் அலர்ந்த அல்லியாகவும் குவளைப் பூக்களாகவும் மலர்ந்தனரே அன்றி அவர்களின் வாக்கும் செயற்பாடும் வாழ்வியக்கத்தின் உற்ற நோய்க்கு மேற்பூச்சு மருந்தாயிற்றே அன்றி சமூக உடலின் உள் மருந்தாகவும் இல்லை; மனக்கவலையை மாற்றவும் இல்லை. வாழ்வியக்கத்தை ஏற்றவும் இல்லை.

வள்ளுவருக்குப்பின் பெரியார் ஈ.வே.ரா. தாம் தம்மை, தம் சமுதாயத்தை, தம் காலத்தை, தாம் வாழும் உலகத்தை நன்கு அறிந்திருந்தார். அதனால்தான் உலகின் எந்த மெய்ப்பொருளையும் கற்றறியாமலே தம் பட்டறிவாலும் நுகர்வறிவாலும் அரிய உயரிய சீர்திருத்தக்காரராகப் போராடுபவராகப் புரட்சிப் புயலாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தம்மைச் சூழ்ந்த தென்னகம்

3