பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • கல்வி என்பது ஒரு மிகப் பெரிய ஒன்று, ஒவ்வொரு மனிதனின்

அனைத்து முன்னேற்றமுமே அதனையே சார்ந்துள்ளது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • பயன்படுத்தி முடிக்கப்பட இயலாத படைப்பு ஊற்றுகள் மனிதனுள் அடைக்கப்பட்டுள்ளன. இல்லாவிட்டால் அவன் மனிதனாகவே ஆகியிருக்கமாட்டான். அவை அடைப்பு நீக்கப்பட்டு, விருவிக்கப் படவேண்டும். அறம் வேண்டும் என்ற கோரிக்கைகள் மூலம் இது செய்யப்படக் கூடாது; ஆனால் மனிதனை முறையான சமுகப் பொருளாதாரச் சூழ்நிலைகளில் வைத்திருப்பதன் மூலமே செய்யப்

பட வேண்டும். ஏ.என்.பில்ஸ்டாய்

  • கல்வி என்பது கல்வியறிவு பெற்ற மனிதர்களை உருவாக்குவது எண்பதில் மட்டுமே நின்றுவிடுவதாக இருக்கக் கூடாது. பள்ளி யுடன் முடிவடைந்து விடாமல், பொது வாழ்விலும் தொடரும் கல்வி தனிப்பட்ட மனிதனின் படைப்புக் கலைகள், ஆற்றல், தன்னார்வம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் முன்னேற்றம் பெறச் செய்யவும் உதவத் தேவையான ஆற்றலையும் வழிகளையும் பெற்றிருக்க வேண்டும். என்.ஏ. உமோவ்
  • தங்களது நுகரறிவுகளையும், போராட்டங்களையும், கோட்பாடு களையும் இளைய தலைமுறைக்கு வளர்ந்தவர்களின் தலைமுறை விட்டுச்செல்வது என்பதை உள்ளடக்கியதே கல்வி எனப்படுவது. ஆண்டண் மக்ரெண்கோ
  • எவ்வளவு அதிகமாகஒருவன்தெளிவுபெற்றவனாக இருக்கிறானோ, அந்த அளவுக்குத் தனது தாய்நாட்டுக்குப் பயண் நிறைந்தவனாக அவன் இருப்பாண். அலெக்சாண்டர் கிரிபோயென்டோவ்
  • ஒரு சமன்மைய நாட்டின் மக்கள் ஒர் உயர்ந்த அழகு நிறைந்த

உணர்வைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

மைக்கேல் கால்னின்