பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தனர்

  • ஒரு மனிதனைக் கட்டுப்பாட்டின் மூலமோ, தன் விருப்புடனோ, நேர் மையான உறுதியான பேச்சு, சிறிது தனிமை, அமைதி அல்லது வீரம் முலம் தனது வீரத்தை வெளிக்காட்ட இயன்ற சூழ்நிலை களில் நீ வைக்காத வரையில், அவனை வீரமுள்ளவனாக வளர்க்க உன்னால் இயலாது. ஆன்ட்ன் மக்ரென்கோ
  • எண்ன செய்யப்பட வேண்டுமென மிகப்பல நற் கருத்துகளை நீ விதைத்த போதும், நீண்ட துன்பங்களை வெற்றி கொள்ளும் பழக்கத்தை நீ கற்றுத் தரத் தவறினால், நீ எதனையுமே கற்றுத் தரவில்லை என்பதைக் கூறும் எனது உரிமையை நான் பெற் றிருக்கவே செய்வேன். ஆண்டன் மக்ரெண்கோ
  • ஒரு மனிதனிடமுள்ள நல்லதைக் கண்டுபிடிப்பதென்பது எப்போ தும் கடினமானதே. ஒரு மனிதனில் இருக்கும் நல்லவை எப்போ துமே வெளியே எடுத்துக்காட்டப்பட வேண்டும். அவ்வாறு செய் வது ஆசிரியரின் கடமை. சில நேரங்களில் தவறு ஏற்பட்டுவிடுவ தற்கான வாய்ப்பு உள்ள போதும், ஆக்க நிலையான ஒரு மன நிலையுடன் அவர் ஒவ்வொரு மனிதரையும் அணுக வேண்டும். ஆண்டன் மக்ரென்கோ * நமது சோவியத்துப் பள்ளியின் நோக்கம், அறிவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அளிப்பது என்பது மட்டு மன்று; இந்த அறிவு அன்றாட வாழ்வை மாற்ற இயன்றவாறு அதனுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதுமாகும். என்.ஏ. குருப்ஸ்கயா
  • வேலையைக் கற்பிக்கும் ஒரு பள்ளியை, நமது வேலையை எவ்வாறு கூட்டாகச் செய்வது என்றும், புதிய அறிவியல் வெற்றி களிலிருந்து நமது வேலையைக் கற்றுக் கொள்வது எவ்வாறு என்றும் காட்டும் ஒரு பள்ளியை நாம் உருவாக்க வேண்டும்.

என்.ஏ. குருப்ஸ்கயா * புதிய கல்வியின் இந்த வினாடி வரையிலான நோக்கங்களில் ஒன்று, எவ்வாறு கூட்டமைப்பாகப் பணியாற்றி வாழ்வது என்பதைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பது என்பதாகும்.

என்.ஏ. குருப்ஸ்கயா 56