பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

கடுமையான எளிமை என்பது நம் வாழ்வில் இணையவிடுவ தில்லை. இயற்கையைக் கண்டும் நாம் திருந்துவதில்லை. உடலும் உள்ளமும் ஒன்றாக இயங்கும் முழு இயக்கமே வாழ்வியக்கம். இவ் உண்மையை உணராவிட்டால் வாழ்வே பெருஞ்சுமையாகி நம்மை அழுத்துகிறது.

இயற்கையும் உண்மையும் வேறுவேறு அல்ல. இதனை உணரவே, உணர்த்தவே மாந்தன் மண்ணில் பிறந்துள்ளான். ஆனால் இப்பேருணர்வை - உண்மையை அறியாமலே 90 விழுக்காட்டினர்

“தேடிச் சோறு நிதம் தின்று - தினம் சின்னஞ் சிறு கதைகள் பேசி வேடிக்கை மனிதராய்”

வாழ்ந்து மடிகின்றனர்.

ஊழலும் மடமையும் நிறைந்த இந்தச் சமுதாயத்தை உண்டாக்கியவர்கள் நாமே. போட்டியை ஊட்டி அச்சத்தை உண்டாக்கும் கல்வியைப் பெற்றவர்களும் நாமே. அறிவியல் வாழ்க்கை வாழும் நாம் இவற்றை எல்லாம் கடந்து உணர்வு நிலை யில் உயர்ந்து, வாழ்க்கையின் முழுமையைப் புரிந்து, அறிவென்னும் அன்பு வாழ்வில் திளைப்பதற்கு முயல்வதில்லை. காரணம் பெரியாருக்கு அடுத்துப் பொது மக்கள் நலன் நாடிப் புதுக் கருத்தைத் தருவதில், கருத்துாற்றை மலையூற்றாய்ப் பெருக் கெடுக்கச் செய்யும் தோழர் ம. இலெ. தங்கப்பா கூறுவது போல்

e “மற்றவர்களோடு இணங்கி வாழ்வதற்குரிய அடிப்படைத் தன்மைகள் குறைந்த அளவு கூட இல்லாமல் மக்கள் உள்ளனர்; இதனாலேயே அவர்களுக்குள் பூசல் நிகழ்கின்றது. இதை

5