பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • உருவாக்கும் பண்பாட்டுப்புரட்சி நடவடிக்கைகள் பற்றிய மக்களின் உறுதியினைத் துண்டும் இலக்கியத்தின் ஆற்றல்களினாலேயே, நடைமுறை இலக்கியத்தைத்திறனாய்வாளர்கள் அளவிடவேண்டும். மாக்சிம் கோர்கி
  • இலக்கியத்தினால் மக்களின் மன நடவடிக்கையைத் தட்டி எழுப்ப இயலும்; என்றாலும் அது பொது மக்களுக்கான ஒரு மாற்றாக எப்போதுமே இருக்க இயலாது என்பதுடன், மக்களின் ஆதர விண்றி அது நிலைத்திருக்கவும் இயலாது.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • ஒரு புத்தகத்தை மதிப்பிரும்போது, அந்தப் புத்தகத்தைப் பற்றி நீ நினைக்கக்கூடாது; ஆனால் அது எதிரொலிக்கும் வெளிப்படுத்

தும் வாழ்க்கையை முதன்மையானதாக நினைக்க வேண்டும்.

என்.ஏ.ருபாகின்

  • ஒர் எழுத்தாளர் எழுதுவதைப் போலத் தங்களால் எழுத இயல வில்லை என்ற எளிய காரணத்துக்காகவே பெரும்பாலும்

அவர்கள் அந்த எழுத்தாளரைத் திட்டுகின்றனர்.

வி.ஏ.குளுசேவ்ஸ்கி

  • மனித படைப்புகள் எப்போதுமே முழுமையான தவறற்ற நிலை யைத் தன்மையை அடைய இயலாது, ஆனால் அங்குத் தவறான முழு நிலையற்ற படைப்புகளிலும் கூட அழகு இருக்க இயலும், ஆண்டன் ருபின்ஸ்கின்
நல்லாய்வு மேற்கொள்ளவும், அதனுடன் செல்லும் தவறுகளைச் செய்யவும் எழுத்தாளர் உரிமை பெற்றுள்ளார் என்றே நான் உறுதி படக் கூறுவேன். துணிவாக மேற்கொள்ளப்படும் முயற்சியின்றி கலை என்பதே இருக்க இயலாது என்பதால், ஒர் எழுத்தாளரின் ஆய்வு மதிக்கப்பட வேண்டும். ஏ.என்.தோல்கதாய்

76