பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், இறப்பைப் பற்றி சிந்திப்பது எண்பது மடமையேயாகும். மாக்சிம் கோர்கி
  • மனித உயிர்கள் அழிபவையேயானாலும், மக்கள் அழிவின்றி

மனித இன மனங்களில் நீடித்து வாழ்பவர்கள் ஆவர்.

மாக்சிம் கோர்கி

  • உனது வாழ்வின் நோக்கங்கள், உனது கடமைகள் அனைத்தை யும் நிறைவேற்றி முடித்துவிட்டோமென்ற உனது அறிதலே, இறப்பைப் பற்றிய உனது அச்சத்தை அழிப்பதாகும்; நீ வாழ்ந்த ஒரு நேர்மையான வாழ்வு, அமைதி நிறைந்த ஒர் இறப்பிற்கு உனக்கு உறுதியளிப்பதாகும். மாக்சிம் கோர்கி
  • இறப்பு என்பது, வாழ்வின் ஒரு பகுதியாக இன்றியமையாத ஒன்றாக விளங்குவதாகும். எனவே இறக்கும்போது, நாம் பெருமையுடன் இறக்க வேண்டும். ஏ.வி.லுனாசாஸ்கி
  • வாழ்வெண்பது நீண்டதாகவும், இறப்பெண்பது கண நேரத்தில் நிகழ்வதாகவும் உள்ள போது, இறப்பைக் கண்டு ஏன் அஞ்சு கிறாய். பெலிக்ஸ் ஜெர்ஜேன்ஸ்கி
  • வாழ்வெண்பது நீடித்து நிலைப்பதாகும், ஆனால் இறப்பெண்

பதோ பொதுவாக ஒரு கணத்தில் நிகழ்வதாகும்.

மிகலாய் லெர்மண்டோவ்

  • இறப்பைக் கண்டு நான் அஞ்சவில்லை, அஞ்சவேயில்லை;

ஆனால் ஒர் அடையாளமுமின்றி மறைவதற்கே அஞ்சுகிறேன்.

மைக்கேல் லெர்மெண்தோவ்

  • வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே அதனை திட்டிக் கொண்டு இருப்பதைவிட, அதனைப் புகழ்ந்து போற்றிக் கொண்டே

வாழ்வது எண்பது அதிக அறிவுடமை ஆகாதா?

லியோனிட் ஆன்ட்ரயேவ்

80