பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • இளமை எண்பது வாழ்நாள் காலத்தில் ஒரே ஒரு முறை வருவ தாகும். மற்ற வயதுகளில் இருப்பதைவிட, பெரியதும், அழகு நிறைந்ததுமான அனைத்திற்கும் திறந்து வழிவிடுபவர்களா கவே ஒவ்வொரு வரும் அவரது இளமைக் காலத்தில் உள்ளனர். வயது ஏறிச் சென்ற பின்னும், தனது இளமையைத் தக்க வைத்துக் கொண்டு, தனது உள்ளுயிரைக் குளிர்ந்து போக, கசப்பானதாக, கடினமானதாக ஆக ஒப்பாமல் இருப்பவனே நற் பேறு விதிக்கப்பட்டவண் ஆவான். விசாரியோன் பெலின்ஸ்கி
  • துணிவு என்பது, குறிப்பாக இளமையில் துணிவு என்பது, வலிமை மிகுந்ததாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும், உயிர்ப்பைத் திறந்து விடுவதாகவும் இருப்பது என்பதுடன், வழக்கமானதல்லாததைத் தவிர வேறெதற்காகவும் வேட்கை கொள்ளாததாகவும் இருப்பதாகும். நிகலாய் கோகோவ்
  • இளமை எப்போதும் தன்னலமற்று இருப்பதாகும்.

அலெக்சாண்டர் எர்சன்

  • ஒரு பொது நலத்திற்காக வலிவுடன் தட்டியெழுப்பப்பருவதைவிட அதிகமாக, விடலைப் பருவத்தைத் தூய்மைப்படுத்துவதும், பெருமைப்படுத்துவதுவும், பாதுகாப்பதும் இவ் உலகில் வேறெ துமில்லை. அலெக்சாண்டர் ளர்சன்
  • எவராவது ஒருவரின் வரையறைகளைக் காண்பதைவிட வருந்தத் தகுந்தது வேறெதுவுமில்லை. அலெக்சாண்டர் எர்சன்
  • இளமை எண்பது மனித இனத்தின் மாபெரும் அற்புதம் நிறைந்த நடமாடும் பகுதியாகும். மைக்கேல் கால்னின்
  • வாழ்க்கை எண்பது அதிக ஆர்வம் அளிப்பதாகவும், மேற்கொள்ளப் பரும் தொழில்கள் மிகப் பலவையாகவும் உள்ளன. பெரும் பயன் கொண்டதும், மனிதன் மகிழ்வுடன் முன்னேற்றமடைய உதவுவது

மான தொழில்கள் இளைஞர்களுக்கும் காட்டப்பட வேண்டும்.

மைக்கேல் கால்னின்

85