பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • நமது அனைத்துப் பெரிய நாடுகளும் வேலை செய்வதை விரும்பு கின்றன. புனிதங்களில் புனிதம் படைத்த ஒரு பண்பாடு; எங்கு பணியாற்றுதல் தவிர்க்கப்படுகிறதோ, அங்குப் பழத்தோட்டங்கள் வீழ்ந்துவிடுகின்றன. உழைப்பிற்கான விருப்பம் எங்கு இல்லை

யோ, அது உலகின் பாலை நிலமாகும்.

செர்ஜி- செர்கபோவ் ஜென்ஸ்கி

கிடமையுணர்வு

கடமையை நிறைவேற்ற நீ விரும்பினால், உனது தகுதி

எண்ன என்பதை அக் கணமே நீ அறிந்து கொள்வாய்.

இலியோ தோல்கதாய் * உன்னுடையதாக இருப்பினும் மற்றவர்களுடையதாக இருப்பினும் சொற்களை எப்போதும் நம்பாதே; உண்னுடைய, மற்றொரு வருடைய செயல்களைத் தவிர வேறெதனையும் நம்பாதே.

இலியோ தோல்கதாய் * நமது உயிரின் விருப்பங்கள் வெறும் விருப்பங்களாக இருக்கும் வரை, அந்தச் சிறந்த விருப்பங்களுக்கு நடைமுறையிலான தன்மைச் சிறப்பை நாம் அளிப்பதில்லை; மனிதர்களின் செயல் களினால் மட்டுமே உண்மைகளை நாம் மதிப்பிடுவதுடன், மனிதர் களின் தகுதி பற்றியும் நாம் தீர்மானிக்கிறோம்.

நிகிலாய் தோப்ரோலியூபோவ் * பழைய மனிதநேயநாட்டம் பறைசாற்றுகின்றது, “உனது தொழிலைப் பற்றி எனக்கு அக்கறையில்லை; நீ ஒரு மனித உயிராக இருப்பதென்பதே இன்றியமையாத செய்தியாகும்.” சமண்மை மாந்தண்மை கூறுகிறது. நீ எப்போதுமே எதுவுமே ச்ெய்யவில்லையென்றால், இப்போதும் நீ எதுவும் செய்து கொண்டிருக்கவில்லையெனில், நீ எவ்வளவு அறிவும், கருணையும் படைத்தவனாக இருப்பினும், நீ ஒரு மனித உயிர் என்பதை ஒப்புக்கொள்ள நான் மறுக்கிறேன்.

அலெக்சாண்டர் பெடயேவ் 95