பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் s த. கோவேந்தன்

சிறுசுறுப்பாயிருத்தல்

  • வாழ்க்கையும், செயல்பாடும் நெருப்பும், ஒளியும் போல நெருக்கம் மிக்கவை. பியோடர் கிளிங்கா
  • செயல்படாமல் இருப்பது வாழாமல் இருப்பதாகும். வாழ்க்கையின் அடிப்படையைத் தன்னுடன் எடுத்துச் செல்லாதவன், வாழ்க்கை செயல்பாடுகளின் அடிப்படையை எடுத்துச் செல்லாதவன், தன்னையே சார்ந்திராதிருப்பவன், வெளியிலிருந்து, தற்செய லாக அனைத்தும் நடந்தேறும் எண்று முடிவற்று எதிர்பார்ப்பவன் ஆவான். விசாரியோன் பெலன்ஸ்கி
  • செயல்படத் தொடங்கிவிட்டால், உண்மையில் செயல்படுபவன் தான் செய்வதற்குப் பல பணிகள் உள்ளன, உடனே காண்ப துடன், அவற்றைச் செய்யத் தனக்கொரு வாய்ப்பு அளிக்கப்பட வில்லையென்று குறைபாடு கூறிக் கொண்டு எப்போதுமே செய லாற்றாமல் இருப்பதில்லை. அவன் எப்போதும் செய்வதற்கு ஏதோ ஒன்றினைக் காண்பதுடன், அதனின் ஒரு பகுதியை

யேனும் செய்து முடிக்கவே செய்கிறான்.

பியோடர் தோஸ்தோயேவளல்கி

  • உண்மையான நடைமுறையின் பகுதி உழைப்பே, உண்மையான நடைமுறையின் உண்மையான அடையாளம் செயல்பாடே.

நிகிலாய் செர்னிசேல்ஸ்கி

  • செயலற்ற தன்மையை எதனாலும் நியாயப்படுத்த இயலாது; முழுமையாகப் பயனற்றதல்லாத ஏதோ ஒன்றைச் செய்வது எப்போதுமே இயன்றதாகும். ஒருவனால் செய்ய இயன்ற அனைத்தையும், ஒருவண் எப்போதுமே செய்ய வேண்டும்.

•’ நிகிலாய் செர்னிசேவ்ஸ்கி

  • ஒர் உயர்ந்த நோக்கத்தினால் தூண்டப்படாவிட்டால், ஒரு மனிதனின் செயல்பாடு பயனற்றதும், சோர்வளிப்பதும் ஆகும். நிகிலாய் செர்னிசேவ்ஸ்கி

97