பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 107 99. இறப்பென்னும் மரணமே இகவாழ்வை முடிப்பதே! எல்லோரும் அதன் அடிமையே! இருக்கின்ற சுற்றத்தை எடுப்பான செல்வத்தை இழப்பதே அதன்முடிவிலே! மறக்கின்ற செயலிதோ! மனதிலும் மறையுமோ மாட்டிடும் விலங்கல்லவோ! வரும் வழி தெரியாமல் வரும்நொடி கூறாமல் வந்திடும் எமனல்லவோ! பிறக்கின்ற மரணமோ பேசுவது மறைவுதான் புரிந்திடல் நலமல்லவோ! புவியிலே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியுமே பரமனின் வரமல்லவோ! இருக்கின்ற நாளெல்லாம் இன்பமாய் வாழுவோம் இன்பமோ நல்தேகம்தான்! இதமான தேகத்தை எழிலோடு காக்கவே இறைவனே வழிகாட்டவா!