பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 11 _ - =-=-— T T- * பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே போராடும் போராட்டமே வாழ்க்கைதான்! பிடிக்காத சம்பவம் பிரளயம் போல் வரும் பேதங்களே வாழ்க்கைதான்! உரைப்புக்கும் இனிப்புக்கும் உரை கூற முடியாத உணர்வுகளே வாழ்க்கைதான்! உண்மைக்கும் பொய்மைக்கும் இரைபோட முடியாத ஊடாட்டமே வாழ்க்கைதான் ! இரப்பைக்கு அடிமையாய் இடர்படும் கொடுமையின் ஏற்றமே இல்வாழ்க்கைதான்! இங்கொன்று ஆங்கொன்று என்றொரு இன்பத்தை இறைப்பதும் வரும்வாழ்க்கைதான்! அரைக்கும் அக்காலனின் எந்திர வாய்க்குள்ளே அடையாத விளையாட்டுத்தான்! அசைபோடும் வாழ்க்கையை இசைவாக வாழவே ஆண்டவா வழிகாட்ட வா!