பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ғ. நவனின்,% நனிச்சுவை சுவையென பிறர்பொருள் நயந்திடும் நரிக்குண மனிதருண்டு! நாடகம் ஆடியே நஞ்சாகி சாடிடும் நாகமாய் மனிதருண்டு! நுனிமரம் ஏறியே அடிமரம் வெட்டிடும் நீர்அட்டை மனிதருண்டு! நூல்பல கற்றாலும் தூற்றியே வாழ்கின்ற நுணலான மனிதருண்டு! உணவே சுகமென்று உறவையும் கெடுக்கின்ற ஒநாய்போல் மனிதருண்டு! உயர்வான உள்ளமும் உரமான தேகமும் இல்லாத பேர்களிவர்கள் ! கனிவான துணையென கட்டுடல் வளர்ந்திடும் கருத்தினைப் புரிந்துகொண்டால், காலமும் மாறிடும் ஞாலமும் திருத்திடும் கடவுளே வழிகாட்டவா!