பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 17, --- கடினமாய் உழைக்கவும் கவனமாய் பிழைக்கவும் கருத்தான மனது வேண்டும்! களங்கத்தை தவிர்க்கவும் கண்ணியம் வளர்க்கவும் களங்காணும் மனதுவேண்டும்! முடியாத செயலையும் முடிக்கின்ற திடத்துடன் முனைப்பான மனதுவேண்டும்! முணுமுணுக் காமலே முயற்சிகள் செய்கின்ற முதலீடு மனதுவேண்டும்! தடித்தன ஆசைகள் தரைத்தனப் பேச்சுகள் தகர்த்திடும் மனதுவேண்டும்! தடம் பார்த்துப்போகும் தரம் பார்த்துச்செய்யும் தன்மையாம் மனதுவேண்டும்! அடித்தளம் அனைத்துக்கும் ஆற்றலாம் மனதுக்கும் அமைந்தது தேகம்தானே! அருமையாம் தேகத்தை பெருமையாய் காத்திட ஆண்டவா வழிகாட்டவா!