பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. முடியில்லா தலையிலே மலர்சூடி மகிழ்ந்திட முடியுமோ! முயலலாமோ! முதலில்லா வியாபாரம் பெருகுமோ இயலுமோ! மூடராய் முயலலாமோ! படியின்றி மாடிக்குப் போய்வர முடியுமோ! பாய்ந்தேற முயலலாமோ! பலகாலம் கிடந்தாலும் பதரெல்லாம் அரிசியாய் பக்குவம் பெறமுடியுமோ! நடிப்பெல்லாம் வாழ்வல்ல! நாணலும் கரும்பல்ல! நாட்டத்தில் தெளிவு வேண்டும்! நலிவில்லா தேகமே நற்சுவைக் களஞ்சியம். நல்லவர் நினைக்க வேண்டும்! அடிப்படை வலிமையாய் இல்லாத மேடைக்கு அலங்காரம் அலங்கோலம்தான்! அசடாக வாழ்கிறோம்! ஆண்மையை உடல்பெற ஆண்டவா வழிகாட்டவா! நவனின்