பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as 20. காற்றிலே Goabadi கலைவதைப் போலவே கருத்துக்கள் மறைவதுண்டு! கரும்பாறை மீதிலே விழுந்தவோர் விதை போல காரியம் தொலைவதுண்டு! சேற்றிலே மோதிய பந்தினைப் போலவே செயல்களும் புதைவதுண்டு! சீரான நூல்கண்டு சிக்குண்டு கிடப்பதாய் இலட்சியம் சிதைவதுண்டு! ஆற்றிலே நாணல் போல் வளைகின்ற ஆற்றலும் அதற்கேற்ற எதிர்நீச்சலும் ஆற்றலாய் இருக்கின்ற தேகத்தில் விளையுமே! அது ஒன்றே உரிய வழிதான்! ஊற்றாக ஊறிடும் நல்லெண்ண உணர்வுகள் உரம் பாய்ந்த உடலால் வரும்! உழைக்கின்ற தேகத்தின் உண் ைமயை உணர்த்தவே ஆண்ட வா வழிகாட்டவா!