பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 38 _- - 25. கணக்கில்லா வாணிகம். கதையிலா நாடகம் கரையில்லா ஆறு தானே! கண்ணிலா ஒவியம், கருத்திலா காவியம்,' கசக்கின்ற சாறுதானே! குணமிலா மதகுரு! குரலில்லா பாடகன் கொள்கையில் சேறுதானே! குளமில்லா தாமரை குடமில்லா தண்ணிரும் குறைகாலப் பேறுதானே! மணமில்லா மாலைகள் மயக்காத லீலைகள்; மதியிலா வானம்தானே! மழைதரா மேகங்கள் மனம் சேரா ராகங்கள் வந்தாலும் விரயம்தானே! அணையென்றால் திடத்துடன் அலை வெள்ளம் தாங்கிடும் அது போல நம் தேகமே! ஆற்றலில் வாழ்கின்ற அழகான உடல் பெற ஆண்டவா வழிகாட்டவா!