பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aമൺ பந்தாட்டம் 37 سس-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 29. அனுபவப் பாடுகள் அளவான கோடுகள் அழகான ஒ வியம் தான் ! அறிஞரின் பாடுகள் அளித்திடும் ஏடுகள் அறிவூட்டும் pவிதம் தான்! அணு அணு வாகவே அறிவுடன் முயற்சிகள் ஆக்கிடும் பெருமைகள் தான்! அடிபட்டு விழுந்தாலும் அஞ்சாது செயல்படின் அவைகளே திறமைகள் தான்! நினையாத நேரத்தில் நினைப்பவை நடந்திடும் நிலைமையே நம் வாழ்க்கை தான்! நினைப்பதை எல்லாமும் நல்லதே ஆனாலும் நிகழ்வதும் நன்மையே தான்! மனம் போல வாழ்க்கைக்கு மார்க்கமே தேகம் தான் வலிமையை ஏற்றி வாழ்வோம்! வரமான வாழ்க்கையை தரமாக வாழவே வழிகாட்ட இறைவனேவா!