பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- சிந்தனைப் பந்தாட்டம் 41 -استیسی 88. இரும்பான திண்மையும் எழிலான தன்மையும் இருப்பதே நல்ல தேகம்! எல்லார்க்கும் மென்மையும் எந் நாளும் உண்மையும் இருப்பதே நல்லஉள்ளம்.! கரும்பான வாய்மொழி கருணையைத் தரும்விழி காட்டுமே நல்ல காட்சி! கலங்காத நெஞ்சுடன் கடமைகள் செய்வதே கடவுளின் நல்ல சாட்சி! பெரும்பாலும் மனிதனே பேரின்பப் பொக்கிஷம் பணமல்ல பணமல்லவே! பேசுவோர் பேசட்டும் பணமென்றே அலையட்டும்! பணம் ஒன்றே வாழ்வல்லவே! அரும்பெரும் செல்வந்தர் அவனியில் யாரெனில் ஆண்மையில் உடல் கொண்டவர்! அழகான தேகத்தை அறிவோடு காக்கவே ஆண்டவா வழிகாட்டவா! சிந்-8