பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. நடைமுறை வாழ்க்கையில் நல்லவர் ஆகவே நடப்பதே நல்ல மதம்தான் ! நாடிய பிறர்க்கெலாம் நல்லதைச் செய்திட நயப்பதும் நல்ல மதம் தான்! கொடை மனம் கொள்வதும் குணத்தோடு சொல்வதும் கோடாத நல்ல மதம்தான்! குன்றேறி நின்றாலும் கொடுமதம் கொள்ளாதே கொள்கையே நல்ல மதம்தான்! தடை வந்து தாக்கினும் தன்னலம் பேணாத தன்மையே நல்ல மதம்தான்! தங்கங்கள் கிட்டினும் தன்னிலை திரியாத தவநிலை நல்ல மதம்தான்! இடையூறு தவிர்த்திடும் இன்னலை மாற்றிடும் எஃகு மனம் எஃகுடலில்தான்! எஃகுடல் காணவே இம்மதம் பேணவே இறைவனே வழிகாட்டவா!