பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தனைப் பந்தாட்டம் 87. மேகங்கள் போலவே மேன்மையாய் பரவலாம் மேலான நலமிருந்தால்! மேளங்கள் போலவே தாளங்கள் முழக்கலாம் மிடுக்கான உடலிருந்தால்! ராகங்கள் போலவே இனிதாக இசைக்கலாம் எழிலான உடலிருந்தால்! ராஜாதி ராஜன் போல் நாளெல்லாம் நடக்கலாம் ரம்யமாய் உடல் இருந்தால்! வேகங்கள் சேர்க்கலாம் வெற்றியைப் பார்க்கலாம் ! விளையாடும் வளமிருந்தால்! வேதனை போக்கலாம் விரட்டும் நோய் நீக்கலாம் விளையாட்டைப் புரிந்துகொண்டால்! ஆகட்டும் பார்க்கலாம் அதற்கென்ன என் பார்கள் அப்புறம் உடல் மறப்பார்! அருமையாம் தேகத்தை பெருமையாய் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா!