பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O 42. அழையாத விருந்தாளி அகலவாய் பெருந்தாழி அநியாய நோய்களன்றோ! ஆண்மையை மறைத்திடும் ஆயுளைக் குறைத்திடும் அலங்கோலப் பேய்களன்றோ! பிழை செய்ய வேண்டிடும் பெருந் துன்பம் தோண்டிடும் பிணியுடல் கொடுமையன்றோ! பிணைக்கைதி போலவே பின்னோடச் செய்திடும் பேரறிவு கொய்யுமன்றோ! நுழைவாயில் ஆகுமே நுரையீரல் சாகுமே உயிர்க்காற்று குறைந்து போனால்! நுண்வழி ஒன்றுதான் நிறை உடல் பயிற்சிதான் நுரையீரல் நிறைத்து விடவே! உழைக்கின்ற ஆசையை ஒட்டியே மகிழ்கிறோம் உடலினை சுமையாக்கியே! உடலுக்குப் பயிற்சியை உண்மையாய் தந்திட உலகனே வழிகாட்டவா! தவனின்