பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 5 1. எதிர்பார்க்கும் இன்பமோ எதிரிலே தெரிந்தாலும் ஏமாற்றி ஒளிந்துகொள்ளும்! எதிர்பாரா துன்பமோ இன்னுயிர் உறவுபோல் எடுப்பாக வந்துதுள்ளும்! புதிரான சம்பவம் புரியாத சமயத்தில் புலிபோல பாய்ந்துகொல்லும்! புரிகின்ற செய்தியும் புளிப்பான அர்த்தத்தில் புரியவே வைத்துச்செல்லும்! குதிர்போல கனவுகள் குதிரையாய் குதித்தாலும் கிடைப்பதோ கொட்டாவிதான்! கும்மாள நினைவுகள் கொப்பளித் தாலுமே குமையுமோ! புகை ஆவிதான்! முதிராத அறிவிலே முளைக்கின்ற செயல்களோ மூளையைக் குழப்பி விடுமே! முன்னறிவோடு நாம் முனைப்புடன் வாழவே மூலவா! நலம் காக்கவா! 59