பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஆண்டவனை அழைத்து, உடலைக் காக்கின்ற அறிவை யும் அந்த உறவையும் கேட்க, நூறு பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன், கம்பன் மகன் அம்பிகாபதியை நோக்கி குலோத்துங்கச் சோழன் , கட்டளையிட்டானாம். சிற்றின்பம் கலவாத நூறு பாடல்களைப் பாடு என்று. அவனும் பாடி, இறுதியில் சிற்றின்பப் பாடல் ஒன்று பாடி சிரமிழந்து போனதாக வரலாறு காட்டுகின்ற குறிப்பை, இங்கே நான் நினைத்துப் பார்க்கிறேன். கவிஞன் என்றால், கவிதை என்றால், உடனே "காதலைப் பிடி, காமத்தைப் படி, கவிதையை முடி' என்கிற தோரணையில் தான் காலந்தோறும் வந்து கொண்டிருக்கின்ற 'மாட்சியை' நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம். அதனால் காதலைப் பற்றிப் பாடாத நூறு பாடல் எழுதுவது என்றால் எத்தனை கஷ்டம் என்பது பாடும்போது தான் புரிகிறது. என் சிந்தனையின் பந்தாட்டமாக நூறு பாடல்கள். சிற்றின்பம் கலவாத, பேரின்பம் விளைவிக்கின்ற பழச் சுவைப் பாடல்கள், இங்கே, இந்நூலில் இருக்கின்றன. அருந்தமிழ் புலவர் அருணகிரி நாதரின் கவிதை ஓட்டத் தையும், ஒளவைப்பாட்டியின் கவிதை எளிமையையும் நினைத்து, மனதில் ஏற்றிக் கொண்டு, கவிதை புனைந்து உங்கள் கரங்களில் இப்பொழுது இறக்கிவைத்திருக்கிறேன். படிக்கும் பொழுது என் முனைப்பு எப்படி வடிவெடுத்து வந்திருக்கிறது என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.