பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 61) 58. கழனியில் உழவுபோல் கைபடும் முழவுபோல் கடமையில் உழைப்பு வேண்டும்! கண்ணாடிப் பண்டம் போல் கையாளும் முட்டைபோல் கவனமாய் முனைப்பு வேண்டும்! நிழல்தரும் மரங்கள் போல் நிறைவள்ளல் கரங்கள்போல்! நல்லுடல் நடத்த வேண்டும்! நெருப்பாக தீமையை நிரப்பியே பொசுக்கிடும் நிறைமணம் பெருக்க வேண்டும்! விழலுக்கு இறைக்கின்ற , வெறும் வேலை மாற்றியே விளைதொழில் புரிய வேண்டும்! விளக்கினைச் சுற்றியே விட்டில சய் மடிகின்ற விம்பினைத் தொலைக்க வேண்டும்: அழகுக்கு அழகொன்று! ஆண்மையும் அது தரும் அன்புதல் பண்பும் தெம்பும்! அறிவான வாழ்க்கையை தரமாக வாழவே ஆண்டவா வழிகாட்டவா!