பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 57. உப்புக்கல் மூட்டையில் உட்கார்ந்து உண்டாலும் உணவுக்கு உப்பு வருமோ! உண்மையின் புகழ் பேசி ஒரு கோடி புளுகினால் உலகிலே பெருமை வருமோ! தப்புக்கு நியாயங்கள் தலைகீழாய் உரைத்தாலும் செய்தவர் பாவம் போமோ! தகரங்கள் வெய்யிலில் தகதகத்து மீனுக்கலாம் தங்கமாய் மாறிப் போமோ! ஒப்புக்கு உபசாரம் ஓங்கியே உரைத்தாலும் உறவுகள் நெருங்கி வருமோ! உடலுக்கு உழைப்பு தான் உறுதி எனக் கூறுபவர் உறங்கினால் உறுதி வருமோ! எப்பொழுதும் எங்கனும் எல்லாமும் தருவது எழிலார்ந்த வலிய உடலே! எந் நாளும் உழைக்கவே ஏற்றமாய் பிழைக்கவே இறைவனே வழிகாட்டவா!