பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சாலையில் மாடுகள் சந்தையில் மனிதர்கள் சட்டங்கள் வளைத்தாளுமோ! சத்திரத் தருமங்கள் சாத்திரச் சடங்குகள் தர்மத்தை வளைத்தாளுமோ! சோலையில் சருகுகள் சூழ்ச்சியில் வரவுகள் சுத்தங்கள் சேர்த்துவிடுமோ! சூத்திரக் குறிப்புகள் சூழ்நிலை வெறுப்புகள் சோர்வினை மாற்றிவிடுமோ! மாலைக்குள் வண்டுகள் வயல்களில் நண்டுகள் வடிவங்கள் ஆக்கித் தருமோ! மண்மேடு உயருமோ மலையாகப் போகுமோ மார்க்கத்தைத் தூக்கிவிடுமோ! வேலைகள் செய்திடும் மேனியோ பயன்தரும்! வேறொன்றும் வழியில்லையே! விளையாடும் நலத்துடன் வினையாற்றும் உடல்பெற விமலனே வழிகாட்டவா!