பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. சட்டமும் மாற்றுமோ தர்மமும் ஒட்டுமோ சமுதாயம் சமுதாயம் தான்! சகதியில் புரள்வதும் சதியென்று மிரள்வதும் சமுதாயச் சூழ் நிலைதான்! வட்டங்கள் வளரலாம் வாட்டங்கள் தீரலாம் வாழ்வுக்குப் பொருள் தெரிந்தால்! வளையங்கள் சுழறலாம் வண்ணங்கள் மிளிரலாம் முயற்சியில் திறம் இருந்தால்! எட்டாத வானுக்கு ஏணியால் பயன் என்ன இதை மக்கள் உணரவேண்டும்! இயற்கையாய் வாழ்வதும் இயற்கையால் வாழ்வதும் இதமான வாழ்க்கையன்றோ! கட்டான மேனியர் கனிவான பாணியும் களிகூர வைக்கு மன்றோ ! கலையான மேனியை கவனமாய் காக்கவே கடவுளே வழிகாட்டவா! நவனின்,