பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தேகத்தைப் பற்றியே தெரிவித்திருக்கிறேன். அதன், ஆண்மையை, ஆற்றலை, அற்புதத்தை, ஆனந்தத்தை, ஆச்சரியத்தை எல்லாம் அருமையாக விவரித்திருக்கிறேன். இந்தக் கவிதைகளைப் படித்து முடித்த பிறகு, நீங்களும் என்னைப் போன்ற இலட்சியக் கோட்டைக்குள் துழைந்து விட்டால், என் மகிழ்ச்சிக்கு எல்லையேது! - - - பட்டபாட்டின் பலனை பெருமையாகப் போற்றி மகிழ்வேன். எவனொருவன் உடல் வலிமையையும் ஒப்பற்ற ஆரோக்கியத்தின் சுகத்தையும் மனதில் வைத்து செயல்படு கிறானோ, அவன் தவறு செய்யமாட்டான். தயங்குவான். தவறான வழிகளை முடிந்த வரை தவிர்த்துவிடுவான். தாரா ளமான பண்புகளுக்குத் தலைவனாக விளங்குவான்" இது தான் எனது அனுபவப் படிப்பு. அனுதினம் நினைப்பு. இந்த இலட்சிய வாழ்வை நீங்களும் வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை உங்களிடம் வழங்கு கிறேன். ஆதாம் சாக்ரட்டீசின் அற்புதமான உழைப்பும், கிரேஸ் பிரிண்டர்சின் நளினமான பணியும் இந்நூலைப் படைத்து வெளியிட்டிருக்கிறது. அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்தும் ஞானமலர் இல்லம் அன்புடன் சென்னை-17 எஸ் காவராஜ் செல்லையா