பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சித்தனைப் பந்தாட்டம் 68. பிராணனைக் கட்டுதல் பிராணா யாமமென பெரியோர்கள் சொல்லுவார்கள்! பிராணனே உயிர்க்காற்று பேரின்ப விசைக்காற்று பெருமையாய்-பேசுவார்கள்! பிராணனே ஜீவனாம்! பிராணனே தேவனாம் ! பிராணனே திருமூலனாம்! பெருமளவு உயிர்க்காற்றைப் பெறாத பேர்களோ பெரும் காலன் அவர்களேதாம்! விரோதி யாரெனில் வேறெவரும் அல்லவே விளங்காமல் வாழ்பவர்தாம்! வீறுட ன் மூச்சையே வெளியிட்டு வாங்கியே விளைகின்ற ஆற்றலால்தான்! பிராணனும் பிழைக்குமே பெரும்சுகம் விளைக்குமே பின்னன்ன ? பயிற்சிசெய்வோம்! பயிற்சிகளைச் செய்யவே பலன்களைக் கொய்யவே பரமனே வழிகாட்டவா!