பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பத்தாட்டம் 89. ஆத்திரம் கொள்வதும் அவசரப் படுவதும் அறியாமை சேய்களன்றோ! ஆணவம் கொள்வதும் அடங்காமல் சொல்வதும் அவலத்தின் வாய்களன்றோ!' நாத்திறம் என்பதோ நல் மொழி உரைப்பது நன்மைக்குவழி சொல்வதே! நாடகம் ஆடாமல் ஞாயங்கள் காட்பது நல்லவர் குலப்பண்பது! கூத்திடும் குதர்க்கத்தின் குரல்வளை நெறித்திடும் கொள்கையே கோடி செல்வம்! கூவத்தைப் போல வாய்ப் பேச்சிலே நாறுவோர் கல்வியும் சாடிக் கொல்லும்! காத்திடும் பண்புகள் காவிரி ஊற்றாக கலை உடல் தனில் ஊறுமே! கட்டான உடலையே கணிவோடு காக்கவே கமலனே வழி காட்டவா!