பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 75. காற்றுக்கு வேலியோ கற்புக்குத் தாலியோ ககனத்தில் இல்லை இல்லை! கடலுக்கு வாளியோ வானுக்கு ஏணியோ காட்சியில் நடப்பதில்லை! ஊற்றுக்கு உதவியோ உயிருக்குப் பதவியோ உலகினில் இல்லை இல்லை! ஒசைக்கு உருவமோ ஆசைக்குப் பருவமோ . . . உண்மையில் இல்லை இல்லை! நாற்றுக்கு சேறுகள் நன்மைக்கு நீதிகள் நாட்டிலே விந்தையில்லை! நேற்றைக்கு நடந்தவை நாளைக்கு நடப்பவை நமக்கென்றும் சொந்தமில்லை! ஆற்றுக்குக் கரைகளே - ஆண்மைக்குத் தசைகளே அடிப்படை உயர்தேகமே! அருமையாம் தேகத்தை பெருமையாய் காக்கவே ஆண்டவா வழிகாட்ட வா! 88.