பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 80, கடலெனில் அலைகளே கனியெனில் சுளைகளே கவலைகள் குடும்பத்திலே! கதையெனில் சுவைகளே கடையெனில் பொருள்களே கசடுகள் இரைப்பையிலே! உடலெனில் உரங்களே உறுப்பெனில் திறங்களே உறவுகள் நெருக்கத்திலே! உரம் எனில் முறைகளே உயர்வெனில் படிகளே உதவிகள் இரக்கத்திலே! தடம் எனில் நடைகளே தரம் எனில் விடைகளே தவறுகள் திமிரினாலே! தசையெனில் விசைகளே தவமெலாம் இசைவிலே தன்மைகள் பொறுமையாலே! வடம் எனில் தேருக்கு வலிவுடல் வாழ்வுக்கு வேண்டுமே புரிந்துகொண்டால்; வளமான வாழ்வையே வளமாக்கும் உடலையே வழிகாட்ட இறைவனே வா!