பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 89. தினம் தினம் வாழ்விலே சிறப்போடு முன்னேற திறமையில் நம்பிக்கை வை! தினம் தினம் சுகத்திலே திகைக்காமல் சுகித்திட தொழிலிலே நம்பிக்கை வை! தினம் தினம் நிம்மதி தேங்காது கிடைத்திட திருப்தியில் நம்பிக்கை வை! தேன்சுவை சுரங்கத்தை தேடியேன் அலைகிறாய் தேகத்தில் நம்பிக்கை வை! உனையன்றி மற்றவர் உனக்காக உதவிடார் உழைப்பிலே நம்பிக்கை வை! ஒருபோதும் லட்சியம் உனைவிட்டு நீங்காமல் உழைப்பினில் நம்பிக்கை வை! மனதுக்குப் பிடிப்பவை வாழ்வுக்குக் கிடைக்காது வந்ததை வரவிலே வை! வந்ததில் மகிழ்ந்திரு வளம்காட்டும் தேகந்தான் வல்லவா வழிகாட்டவா! 97