பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் -** 91. எதிர்பார்த்த சந்திப்பு இல்லாமல் போய்விடில் எத்தனை துன்பம் துன்பம்! எதிர்பார்த்த நிந்திப்பு இல்லாமல் போய்விடில் எத்தனை இன்பம் இன்பம்! புதிர்போட்ட துன்பங்கள் புகைபோலப் போய் விடில் பூரிப்பு கொஞ்சம் கொஞ்சம்! புன்னகை உறவுகள் புலி போலப் பாய்ந்திடில் பொறுக்குமோ பாவி நெஞ்சம்! அதிர்ச்சியாய் எதிரிகள் அரண்டோட முயற்சிகள் அளிக்கின்ற வெற்றி இன்பம்! அடிக்கடி உரசல்கள் ஆண்டவன் பரிசுகள் அதை ஏற்கும் துணிவும் இன்பம்! முதிர்ச்சியில் மனம் பெற மகிழ்ச்சியில் தினம் வர முதிராத தேகம் வேண்டும்! முனைப்போடு தேகத்தை நினைப்போடு காக்கவே மூலவா வழிகாட்டவா! { ... " |