பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


அறிவினனாக நடப்பதும் சில சமயம் பெரிய புத்திசாலித் தனமாகும்.

ஜூனியஸ் புரூட்டஸ் அறிவீனன் போல், கபடநாடகமாடியதைப் போல், வேறு யாரும் அத்தனை புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருக்க முடியாது. அவனுடைய இந்தக் கள்ள நாடகத்துக்கு டீட்டஸ் லீவியஸ் ஒரே ஒரு காரணம் தான் சொல்லுகிறான். அதாவது, அவன் தன் பிதிரார்ஜித சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காகவும், தான் பெரும் பாதுகாப்புடன் வாழ்வதற்காகவும் இந்த நாடகமாடினான் என்று சொல்லுகிறான். இருப்பினும் நாம் அவனுடைய நடத்தையை நன்றாகக் கவனித்தால் இதற்கு வேறொரு காரணமும் இருப்பது புலப்படும். இவ்வாறு தன்னைப் பற்றி மற்றவர்கள் கவனிக்காதபடி செய்து கொண்டு, அவன் அரசர்களை அழித்துத் தன் நாட்டை விடுதலை செய்யக்கூடிய சிறந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும் என்பதுதான் அது.

தங்கள் அரசனை வெறுக்கக் கூடிய எவரும் புரூட்டஸின் உதாரணத்திலிருந்து ஒரு பாடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் தங்கள் பலத்தை அளந்துகொள்ள வேண்டும். அரசனுடைய பகைவர்களாகத் தங்களை அறிவிக்கப் போதுமான பலம் இருப்பதாகத் தெரிந்தால் அவர்கள் அவனுக்கு எதிராகப் போர் தொடுப்பது கண்ணியமானதும் ஆபத்துக் குறைந்ததுமான வழியாகும். அரசனை எதிர்த்து நேரடிப் போர் நடத்தக்கூடிய நிலையில் அவர்கள் இல்லையென்றால், அவனுடைய நட்பைப் பெறத்தக்க உபாயங்களை எல்லாம் கையாள வேண்டும். அவனுக்குப் பிடித்தமான விஷயங்கள் தங்களுக்குப் பிடிப்பது போலவும் அவனுக்கு மகிழ்ச்சி தரத்தக்க விஷயங்களில் தாங்களும் சந்தோஷம் காண்பது போலவும் காட்டிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பழக்கம் எவ்விதமான ஆபத்துமற்ற மன நிம்மதியை உறுதிப்படுத்துவதோடு, அரசனுடைய சொத்துச் சுதந்திரங்களைப் பங்கு போட்டுக் கொண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் அதே சமயத்தில் குரோதத்தைத் திர்த்துக் கொள்ளக் கூடிய வசதியையும் உண்டாக்கும். ஓர் அரசனிடம் பழகுபவர்கள் அவனுடைய அழிவிலே தாங்களும் சம்பந்தப்படும்படியாக மிக நெருங்கியிருக்கக் கூடாதென்றும்,