பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

ஆபத்துக்களையும் அனுபவிப்பதைவிட உடனடியாக நரகத்திற்குத் திரும்பித் தம் நடவடிக்கைகளைப் பற்றித் தெரிவிப்பதென்ற முடிவுக்கு வந்தார். ஆகவே, பெல்பாகப் நரகத்திற்குத் திரும்பிச் சென்று தம் மனைவி தமக்குக் கொண்டு வந்து சேர்த்த கேடுகளைப் பற்றிய விவரங்களை அங்குள்ளவர்களுக்குத் தெரிவித்தார். அந்த நரகவாசியைக் காட்டிலும், அதைப் பற்றி நன்றாக அறிந்திருந்த விவசாயி ஜீயான்மாட்டியோ, ஆனந்தத்துடன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.



நூல் சுருக்கம் : 4
மந்திர கோலா
(மாக்கியவெல்லி எழுதிய இன்பியல் நாடகத்தின் சுருக்கம்)

நாடக உறுப்பினர்

கலிமாக்கோ - பிளாரன்சைச் சேர்ந்த ஓர் இளைஞன். சிரோ - அவனுடைய வேலைக்காரன்.
லிகுரியோ - ஒரு தரகன்,
மெசர் நிக்கியா - ஒரு வழக்கறிஞர்,
லுக்கிரிசியா . அவர் மனைவி,
சோஸ்ட்ராட்டா - அவள் தாய்,
டிமோஷியோ - பாதிரியார்.

காட்சி : 1
பிளாரன்ஸ் நகரில் ஒரு சதுக்கம்

வேலைக்காரன் சிரோ போகப் புறப்படுகிறான் : வாலிபன் கலிமாக்கோ அவனைத் தடுக்கிறான்.