பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மீதோ தான் மனித இருந்த பல இகழப்படுவர்கள் வெளையும் வாய்ப்புக்குத் தகுந்தபடி இராச்சியங்களை அடைபவர்களையும், இழப்பவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் வென்றால் புகழப்படுகிறார்கள்: தோற்றால் இகழப்படுகிறார்கள். நீண்ட காலம் வளமாக இருந்த பிறகு இழப்பு நேரிடும்போது மட்டும்தான் மனிதன்மீது பழியை ஏற்றாமல் ஆண்டவர் மீதோ அல்லது அவனுடைய தீய விதியின் மீதோ அந்தப் பழி சுமத்தப்படுகிறது.

மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, இயற்கை அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனத்தையும் குணத்தையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன். மனிதர்கள் தங்கள் குணவியற்படியும், மனப்போக்கின்படியும் செயலாற்றுகின்றார்கள். ஆனால், இன்னொரு புறத்தில் காலமும் சூழ்நிலையும் மாறுபடுகிறது. தன் போக்கின்படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் பொருந்தி விடுகின்றபோது, அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகின்றான். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான். காலப் போக்கும் சூழ்நிலையும் இடத்துக்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபடுவதால், மாறுபட்ட இரண்டு முறைகளில் செயலாற்றுகின்ற வெவ்வேறு மனிதர்கள் ஒரே பலனையடைய முடியும். ஆனால், காலமும் சூழ்நிலையும் பொதுவாகவும் குறிப்பாகவும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் மனிதனின் குணமும் போக்கும் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. ஆகவேதான் மனிதனுக்கு ஒரு - சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் உண்டாகின்றன. காலமும் சூழ்நிலையும் இவ்வாறு இருக்கும் என்று முன் கூட்டியே அறியக் கூடிய அவ்வளவு புத்திசாலியாக மனிதன் இருந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டால் அவன் எப்போதும் நல்லதிர்ஷ்ட முடையவனாகவேயிருப்பான். அல்லது தீமைகளையாவது தவிர்த்துக்கொள்ளக் கூடியவனாக . இருப்பான். மதியுடையவன் விதியையும் விண் மீன்களையும் ஆளுவான் {விதியை மதியால் வெல்லலாம்) என்ற பழமொழியும் உண்மையாகி விடும். துரதிர்ஷ்ட வசமாக இந்த உலகத்தில் அவ்வளவு புத்திசாலிகள் காணப்படவில்லை. ஏனென்றால், முதலாவதாக மனிதர்களால் எதிர் காலத்தையறிய முடிவதில்லை. இரண்டாவதாக அவர்கள் தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. ஆகவே தன்