பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

கடிதம் : 3
பேன் கூட்டத்திடையே வாழ்கிறேன்


பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்களுக்கு,
பிளாரென்ஸ், ஜுன் 10, 1514.

பெருமை தங்கிய ராஜதூதர் அவர்களே,

என் கூட்டத்துடன் நான் நாட்டுப் புறத்தில் இருக்கின்ற பொழுது, தங்கள் இரு கடிதங்களும் கிடைத்தன. பிரான்காசியோவிற்காக டொனாட்டோ அவற்றை அனுப்பி வைத்தார். என் சொந்த விஷயம் பற்றியும், தங்களுடைய இருதயப் பிரச்சனைகள் பற்றியும் பிற எல்லா விஷயங்களுக்கும், எனக்குப் பொருத்தமாகத் தோன்றிய முறையில் நான் அவற்றிற்குப் பதில் அளித்தேன். ஆனால், அதன் பிறகு எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக பிளாரென்சுக்கு இரண்டு நாட்களாக வந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லாவற்றையும் திரும்ப எழுதுவது எனக்குச் சிறிது சிரமமாகத் தோன்றுகிறது. ஆகவே நான் பொறுத்திருந்து, தாங்கள் இப்பொழுது எனக்கு அறிவித்த அதே காரணங்களை முன்னிட்டு ரோமாபுரிக்குச் செல்லவில்லை என்பதைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியெழுதி அந்தக் கடிதத்தைப் பின்னால் அனுப்புகிறேன். நானே அவற்றையெல்லாம் பற்றி முன் கூட்டி அறிந்துகொண்டு விட்டேன்.

ஆகவே, என் உழைப்பின் பெறுமதியை நினைவு வைத்திருப்பவர்களோ, அல்லது நான் ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுவேன் என்று எண்ணுபவர்களோ யாரும் இல்லாத இந்தப் பேன் கூட்டத்தினிடையே நான் தொடர்ந்து இருந்து வருகிறேன். ஆனால், இதே நிலையில் நான் நெடுநாட்கள் இருக்க முடியாது. என் பொருளாதாரம் குறைந்து கொண்டு வருகிறது. கடவுள் தாமாக என்னிடம் ஏதேனும் அருள் புரியாவிட்டால், எப்போதாவது ஒருநாள் நான் வீட்டை விட்டுக் கிளம்பி, எங்காவது கடிதம் வாசித்துக் காண்பிப்பவனாகவோ, அல்லது யாராவது காவற் சேவகனுக்குக் கணக்குப் பிள்ளையாகவோ இருந்து காலத்தைக் கழிக்க வேண்டியதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியும் ஒரு நல்ல நிலையில் என்னால்