பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

கடிதம் : 4
ஐம்பது வயதிலும் ஆசை


பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்களுக்கு,
பிளாரென்ஸ், ஆகஸ்டு, 3.1514,

என் அன்பு நண்பரே,

ரோமாபுரியில் நடந்த உங்கள் காதல் விவகாரங்களைப் பற்றி நீங்கள் எழுதிய பல விஷயங்களும் என்னை இன்பத்தில் ஆழ்த்தின. உங்கள் உல்லாச வாழ்க்கையைப் பற்றியும், துயரங்களைப்பற்றியும் படித்து நினைத்துப் பார்த்தபோது என் இதயத்திலிருந்து துன்பத்தின் ஒரு கோடி கூடத் தூக்கியெறியப் படவில்லை. உங்களுக்குச் சரிக்குச் சரி சொல்லிக் காட்டும் நிலையில் இருப்பது என் அதிர்ஷ்டமே. நான் நாட்டுப்புறத்தில் இருக்கும் பொழுது, இயற்கையாகவும், இயற்கையின் மேல் அலங்காரமாகவும் மிகுந்த அழகும், மிகுந்த கவர்ச்சியும், மிகுந்த மென்மையும், இனிமையும் பொருந்திய ஒருத்தியைக் கண்டேன். நான் மிகுதியாக அவளைப் புகழ்ந்துரைக்கவோ, அதற்குமேல் அதிகமாகக் காதலிக்கவோ முடியாத அளவு அவ்வளவு பேரெழில் படைத்தவளாக அவள் இருந்தாள்.

நீங்கள் எனக்குச் சொன்னது போலவே, அதெல்லாம் எப்படி ஆரம்பமாகியது. எந்த வலையால் காதல் என்னைப் பிடித்துக்கொண்டது. எங்கு அதனை விரித்தது. அதன் பின்னல் எப்படிப்பட்டது என்றெல்லாம் நானும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். காதல் தேவதையினால் மலர்களினிடையிலே மிக இனிமையாகவும். அருளுடனும், நெய்யப்பட்ட அந்தத் தங்க வலையிலிருந்து, சாதாரணமாக எவனும் கிழித்து எரிந்து தப்பிக்கொள்ள முடியுமாயினும், நான் அதிலிருந்து வெளியேற மனமின்றிக் கிடந்தேன். அந்த மென்மையான கண்ணிகள் பலமாக முடியப் பட்டு பெருங்கட்டுக்களாக மாறும் வரையில் நான் அவற்றின் அரவணைப்பிலே சிக்கிக் கிடந்தேன். இவ்வாறு என்னைப் பிடித்த காதல் சாதாரணமாகவே என்னிடம் தன் நடவடிக்கைகளைக் காட்டியது என்று எண்ணிவிடவேண்டாம். நான் தவிர்த்துக்கொள்ள மாட்டாத அல்லது விரும்பாத மாதிரியான தந்திரோபாயங்களை அது